Tuesday, November 8, 2011

வெறும் 90 செக்கன்களில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா: புதிய புத்தகத்தினால் பரபரப்பு

அல் கொய்தா இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன் வெறும் 90 வினாடிகளுக்குள் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற பரப்பான தகவலை அமெரிக்க சீல் படையின் முன்னாள் அதிகாரியொருவர் வெளியிட்டுள்ளார்சக் பாரர் என்ற அமெரிக்க நேவி சீல் படையின் முன்னாள் கட்டளை அதிகாரியாகக் கடமையாற்றியவரே இப்புத்தகத்தினை எழுதியுள்ளார். 

அவர் தற்போது வெளியிட்டுள்ள புத்தகமொன்றில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமை தொடர்பில் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். 

பாரர் இத்தாக்குதலில் நேரடியாக பங்குபற்றாதபோதிலும் அதில் பங்குபற்றிய வீரர்கள் பலரின் அனுபவங்களையும், பாகிஸ்தானின் அபோடாபாத்தில் நிகழ்ந்தவற்றைக் கேட்டறிந்தும் அவர் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளார். 

ஆரம்பத்தில் சுமார் 45 நிமிட நேர போராட்டத்திற்கு பின்னரே பின்லேடன் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

எனினும் இப்புத்தகத்தின் படி சுமார் 90 செக்கன்களில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாரர் குறிப்பிட்டுள்ளார். 

நீண்ட நேர துப்பாக்கிச் சண்டை நடைபெறவில்லையெனவும் மொத்தமாக நான்கு சுற்றுக்கள் மாத்திரமே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதெனவும், ஹெலிகொப்டரில் வந்த படையினர் ஒசாமா தங்கியிருந்த வீட்டு மேல் மாடியில் வந்திறங்கியே அதனுள் நுழைந்ததாகவும் அப்புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலில் பின்லேடனின் மனைவி அமால் துப்பாக்கிக் குண்டு தாக்கி படுகாயமடைந்தார். தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் அவர் கொல்லப்பட்டார். மேலும் அல்கொய்தாவின் துணைத் தலைவராக இருந்த ஜவாஹிரி மூலம் கூரியர் அனுப்பி வந்ததை வைத்து பின்லாடனின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தனது புத்தகத்தி்ல் கூறியுள்ளார். 

ஒசாமா கொல்லப்பட்டபோது அவரின் இளையமனைவி 'அமால்' உம் உடன் இருந்ததாகவும் அவர் ''அது ஒசாமா அல்ல, வேண்டாம், வேண்டாம் "என அரபு மொழியில் கூக்குரலிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இத் தாக்குதலில் பங்குபற்றிய சீல் படையினர் வேர்ஜினியாவில் உள்ள இரகசிய படைமுகாமொன்றிலேயே பயிற்சி பெற்றதாகவும், அரம்பத்தில் இந்நடவடிக்கைக்கு 'கூஸ்ட் ஹொக்ஸ்' எனப்படும் ராடார்களின் கண்களுக்கு மண்ணைத்தூவிச் செல்லக்கூடிய அதிநவீன ஹெலிகொப்டர்களையே பயன்படுத்த எண்ணியிருந்த போதிலும் பின்னர் வேறு ஹெலிகொப்டர்கள் உபயோகப்படுத்தப்பட்டதாகவும் பாரக் குறிப்பிட்டுள்ளார். 

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்புத்தகம் எதிர்வரும் 8 ஆம் திகதி விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment